
சில்வார்பட்டியில் திமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியில் நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு ஒன்றியம் சார்பில் “நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு” சாதனை விளக்க பொதுக்கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாநில உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எல்.மூக்கையா, மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டியன், சட்டமன்ற தொகுதி பார்வையாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தேனி வடக்கு மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் எம்பி, தெற்கு ஒன்றிய செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சரவணக்குமார் எம்எல்ஏ, தலைமை கழக பேச்சாளர்கள் பழனி அப்பாஸ், மரியராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் ஆளும் திமுக அரசு நான்காண்டு செய்த திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து விளக்கி பேசினர்.
கூட்டத்திற்கு முன்னதாக அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாநில மீனவர் நலவாரிய உறுப்பினர் குள்ளபுரம் முருகன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தங்கவேல், கெங்குவார்பட்டி பேரூர் செயலாளர் தமிழன், வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.டி.பரமசிவம், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராம்ஜி, உதயன்ராயேஷ்வரன், ஒன்றிய துணைச்செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திராவிடன், துணை அமைப்பாளர்கள் ராஜேஷ், கிளை பொறுப்பாளர்கள் தங்கவேல், தெய்வம், நாகராஜன், காமையா, செளந்தர், ரெங்கசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வராணி செல்வராஜ், பரமசிவம், தகவல் தொழில்நுட்ப அணி பழனிக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பொதுக்கூட்டம் முடிவில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முருகபாண்டி நன்றி கூறினார்.






