
மதுரை நகரில் கோயில்களில் நடைபெற்ற திருக்கல்யாணம்.
மதுரை.
மதுரை நகரில் பல்வேறு கோயில்களில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.
மதுரை அண்ணாநகர், யாரைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் அழியாபதீஸ்வருக்கு அம்பாளுக்கும் திருக்கல்யாணம் மணி கண்டன் பட்டர் தலைமையில் நடைபெற்றது.
கோயில் நிர்வாகிகள் முருகன், சிவா, சேது மூர்த்தி ஆகியோர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

இதேபோல் மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், ஞான சித்தி விநாயகர் ஆலயம், மதுரை அண்ணாநகர் வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்தில் காந்தன் பட்டர் தலைமையில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
நிர்வாகிகள் முத்துக்குமார், மணிமாறன் ஆகியோர்கள், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்கள். மதுரை தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.

ஆன்மீக பெண்கள் குழுவினர் சீர்வரிசை யுகடன் கோயிலுக்கு வந்தனர். திருக்கல்யாணம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியில் ருத்ர ஹோமங்களை சிவாச்சாரியார் நடத்தினர். இதையடுத்து, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் (விருந்து) நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.