
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் நாரையூரணி கிராமத்தில் பரிவார தேவதைகளுக்கு வருடாபிஷேக விழா நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் நாரையூரணி கிராமத்தில் அருள்பாளிக்கும் தேவர் உறவின் முறைக்கு தனித்து பிரதான பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ அழகுவள்ளியம்மன், ஸ்ரீ செல்வகணபதி மற்றும் பரிவார தேவதைகளுக்கு வருடாபிஷேக விழா நடைபெற்றது.
நிகழும் மங்களகரமான சோபகிருது வைகாசி மாதம் 5 ஆம் தேதி 19.5.2023 வெள்ளிக்கிழமை சுக்கில பக்ஷம் அமாவாசை திதியும் கார்த்திகை நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபயோக தினத்தில் அன்று காலை 9 மணிக்கு மேல் சுபலாப வேளையில் அருள்மிகு ஸ்ரீ அழகு வள்ளியம்மன் ஸ்ரீ செல்வ கணபதி மற்றும் பரிவார தேவதைகளுக்கு வருடாபிஷேக விழாவும் மாலை 4 மணி அளவில் முளைப்பாரி எடுத்தல், பால்குடம் எடுத்தல், மற்றும் பொங்கல் வைத்தல் சிறப்பாக நடைபெறுவதால் அன்பர்கள் அனைவரும் வெகு திரளாக வருகை புரிந்து அம்மன் அருள் பிரசாதம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
19.5.2023 அன்று காலை 9 மணிக்கு ஸ்ரீ அழகு வள்ளியம்மன் ஸ்ரீ செல்வகணபதி மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனையுடன் ஆகாய கும்பத்தில் நீரூற்றி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
காலை 10 மணிக்கு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெறும்.
4 மணிக்கு மேல் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து பால்குடம் எடுத்தல் மற்றும் அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். என நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளார்.