April 28, 2025
செப்டிக் டேங்க் அகற்றும் வாகனத்திற்கு உரிமம் இல்லாவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என பழனி நகராட்சி எச்சரிக்கை.

செப்டிக் டேங்க் அகற்றும் வாகனத்திற்கு உரிமம் இல்லாவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என பழனி நகராட்சி எச்சரிக்கை.

பழனி நகர் பகுதியில் செப்டிக் டேங்க் அகற்றும் வாகனங்களுக்கு லைசன்ஸ் பெற வேண்டும் என நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பழனி நகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மனிதக் கழிவு, கசடு, மற்றும் கழிவு மேலாண்மை கொள்கையின்படி உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை மேம்படுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளன.

இதன்படி கழிவு நீர் அகற்றும் லாரிகள் மற்றும் ட்ரெய்லர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த கடந்த 2022 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி வாகன உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நகராட்சி மூலம் இரண்டு ஆண்டுகள் செல்லத்தக்க உரிமம் பெற விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான கட்டடம் ரூபாய்.2000 உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும்.

செப்டிக் டேங்க் அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற்று இயக்க வேண்டும். உரிமம் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும். மேலும் நீதிமன்றம் மூலம் வழக்கு பதிவு செய்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு பழனி நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.