
மலைவாழ் மக்களுக்கு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, குறிஞ்சி நகரில் எட்டூர் இளைஞர் குழு மற்றும் தேனி மாவட்ட நல்லோர் வட்டம் சார்பில் இணைந்து குறிஞ்சி நகரில் உள்ள மலைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
இதில், தேனி மாவட்டம் , வீரபாண்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் முதுநிலை மருத்துவர் பிரியா, மருந்தாளுனர் சமூகசேவகர் ரஞ்சித்குமார், மருந்தாளுனர் ரமேஷ் மருத்துவ பரிசோதனைகள் செய்தனர்.
இதில், ரத்த குறைபாடு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு,தோல் சம்பந்தமான அறிகுறிகளை கண்டறிதல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவைகளை வழங்கினர்.
இதில், மலைவாழ் மக்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பட்டுச்சென்றனர்.