
சில்வார்பட்டி கிளை நூலகத்தின் கூடுதல் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
பெரியகுளம் ஏப்.14
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியில் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிளை நூலகத்தின் இணைப்பு கூடுதல் புதிய கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து நூலக வாசகர் வட்டம் பொறுப்பாளர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் கிளை நூலகர் முருகானந்தம், நல்நூலகர்கள் சவடமுத்து, குமரன், அரசு ஒப்பந்ததாரர் மரியதாஸ் மற்றும் போட்டித்தேர்வு மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேனி மாவட்டத்தில் இதேபோன்று 19 நூலகத்தின் இணைப்பு கூடுதல் கட்டிடங்கள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு நூலகர்கள் மற்றும் வாசகர் வட்டம், போட்டித் தேர்வு மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றனர்.