
பழனியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக இரமலான் திருவிழாவை முன்னிட்டு பரிசு பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன..
திண்டுக்கல் மாவட்டம் பழனி மதீனா நகர் பகுதியில் புனித ரமலான் திருவிழாவை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பாக இஸ்லாமியர்களுக்கு ரமலான் பரிசுப் பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜன், மாவட்ட இணை செயலாளர் விஜய் சிவா, மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிபாலன் மற்றும் விழாவில் முகமது இக்பால், கோழி சித்திக், முகமது இத்ரீஸ், அபுதாகிர்,ஆசாத், சாந்துமுகமது, கார்த்திகேயன், வலசுதுரை, லட்சுமி காந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டரணி வர்த்தக அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு 300 இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ரமலான் பரிசுப் பொருட்களை வழங்கினர்.

தொடர்ந்து இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு ரமலான் வாழ்த்துக்களை ஒருவரை ஒருவர் தெரிவித்துக் கொண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றன..