
காரியாபட்டி சுரபி உண்டு உறைவிடப் பள்ளி ஆண்டு விழா
காரியாபட்டி – மார்ச் 29 விருதுநகர் மாவட்ட ஒருங்கினைந்த கல்வி திட்டத்தின் மூலம் இயங்கி வரும் காரியாபட்டி சுரபி உண்டு உறைவிடப் பள்ளி மற்றும் கஸ்தூரிபா பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி சார்பாக ஆண்டு விழா நடை பெற்றது.
விழாவுக்கு சுரபி இயக்குநர் விக்டர் தலைமை வகித்தார். லட்டார கல்வி அலுவலர் அலமேலு முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பானுபிரியா வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவர் களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.
உதவி திட்ட அலுவலர் மூர்த்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், திருநாவுக்கரசு காரியாபட்டி அரிமா சங்க தலைவர் அழகர் சாமி, பொருளாளர் ராமசாமி, வழக்கறிஞர் செந்தில்குமார் முனிஸ்வரன் , பரக்கத் , பிரின்ஸ் நர்சிங் பள்ளி முதல்வர் மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர் ஆசிரியர் ரேவதி நன்றி கூறினார்.