March 3, 2026
பாலமேடு அருள்மிகு பத்திரகாளியம்மன் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

பாலமேடு அருள்மிகு பத்திரகாளியம்மன் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளி அம்மன் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் அக்னிசட்டி இன்று காலை நடைபெற்றது.

பால்குடம் அக்னி சட்டி எடுக்கும் பக்தர்கள் பாலமேட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக வந்து கோவிலில் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர் பக்தர்கள் கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்தும் 21 சட்டி எடுத்தும் தீச்சட்டி எடுத்தும் குழந்தைகள் பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர் பாலமேடு கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அன்னதானம் நீர்மோர் சர்பத் வழங்கினர் நாளை செவ்வாய்க்கிழமை முளைப்பாரி ஊர்வலமும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாலமேடுஇந்து நாடார்கள் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *