
வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.
வத்தலக்குண்டு.மார்ச்.12-
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ரோட்டரி சங்கம் சார்பாக ,சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது .
விழாவில் 25 நபர்களுக்கு, பல்வேறு துறைகளில் ஆளுமையோடு திகழும் , பெண்களுக்கு, தாரா விருதுகள் 2025 வழங்கப்பட்டது.
நிகழ்வில் தலைமை விருந்தினராக முனைவர் பாத்திமா பேகம், சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மிஸ்.கவிதா மற்றும் மதுரை துணை ஆட்சியர் அனிதா கலந்துகொண்டு விருதுகளை வழங்கினர் .
நிகழ்வில் தலைவர் மருத்துவர் யூசுப் மௌலானா வரவேற்புரையாற்றினார்.
துணை ஆளுநர், வத்தலக்குண்டு ரோட்டரி மாதவன் வாழ்த்துரை வழங்கினார் .
செயலாளர் மகேந்திர பாண்டியன் தொகுத்து வழங்கினார்.
பொருளாளர் ஆடிட்டர் விஜயன் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் வத்தலகுண்டு ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் பெருந் திரளாக கலந்து கொண்டனர்.






