
பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா:
தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் ஆணைக்கிணங்க தேனி மாவட்டம் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் அ.ஜெ.கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் பாண்டியராஜன், பொருளாளர் பார்த்தீபன், பள்ளி மேலான்மைக்குழு தலைவர் ஈஸ்வரி. துணைத் தலைவர் ராஜாராம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி முன்னாள் மாணவர்கள் வி.டி.எஸ். ராஜவேல், வெங்கடேசன், கார்த்திக், முன்னாள் மாணவர்களும், ஆரியர்களுமான, ஞானசேகரன். சிவசுப்பிரமணியன், செந்தில்குமார், நாகவேல் ராஜன், வட்டாரவளர்ச்சி அலுவலர் (ஓய்வு) ரவி, திமுக.முன்ளாள் நகர செயலாளர் எஸ்.பி.முரளி,மக்கள் நல சங்க உபதலைவர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஆசியர்கள் ராமகிருஷ்ணன். ரேணுகா தேவி, சத்திய தீபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி நன்றியுரையாற்றினார். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பள்ளியில் கலை நிகழச்சி நடைபெற்றது. கலைநிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர். இவ்விழாவில் பள்ளி சார்பில் மாநில, மாவட்ட அளவில் நடைபெற்ற, கல்வி, ஓவியம், சிற்பம், கலைநிகழ்ச்சி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி ,போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஆசிரியப் பெருமக்கள், மாணவர்கள், பள்ளி அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.