
ஸ்ரீபெரும்புதூர் முழுவதும் புரட்சி மகான் ஸ்ரீராமானுஜரையே ஏமாற்றும் நயவஞ்சகர்களே என தொடங்கி, மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகமே பதில் சொல் என வாசகம் நிரம்பிய வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பஸ் நிலையம் மற்றும் கடைவீதி, ராமானுஜர் கோயில் என ஸ்ரீபெரும்புதூர் முழுவதும்
புரட்சி மகான் ஸ்ரீ ராமானுஜரையே ஏமாற்றும் நயவஞ்சகர்களே!
ஓய்வு பெற்ற ஊழல்வாதி ரவிச்சந்திரனை மீண்டும் பணியில் அமர்த்தியது ஏன்?
மகான் ஸ்ரீ ராமானுஜருக்கு அணிவித்த முத்து மணி மாலை எங்கே?
தொன்று தொட்டு காலம் காலமாக ஸ்ரீ ஆதிகேசவ பெருமாளையும் ஸ்ரீ ராமானுஜரையும் தோளில் சுமந்தவர்களுக்கு பதிலாக புதியதாக வெளியூர் ஆட்களை இறக்குவது எதற்கு?
ஐந்து கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ராமானுஜர் மணி மண்டபத்தை பூட்டி வைத்து அவரது பக்தர்களை ஏமாற்றுவது ஏன்?
மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகமே பதில் சொல்
இப்படிக்கு புரட்சி மகான் ஸ்ரீ ராமானுஜர் பக்தர்கள்
என அச்சிடப்பட்ட வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த வால்போஸ்டரால் ஸ்ரீபெரும்புதூர் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.