
தொண்டியில் தேசியத் தலைவர் திரைப்படத் தயாரிப்பாளர் சவுத்ரி மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் தொண்டியில் இந்து ஜனநாயக பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இந்து ஜனநாயக பேரவை மாநில அமைப்புக்குழு தலைவர் பூமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் தலைமையில் உசிலம்பட்டி தொகுதியில் உசிலம்பட்டி பகுதியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு போஸ்டர் உசிலம்பட்டி பகுதியில் ஒட்டப்பட்டது.
இதனை கண்டித்து தேசியத் தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் ஏ. எம்.சௌத்ரி வலைதளங்களில் கண்டன குரல் கொடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் படி தேசியத் தலைவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எம். சவுத்ரி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த போடப்பட்ட வழக்கு திட்டமிட்டு போடப்பட வழக்கு என்றும் இவ் வழக்கை ரத்து செய்ய கோரியும்,உசிலம்பட்டி பகுதியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்ய கோரியும் போராட்டம் நடைபெற்றது.
இந்து ஜனநாயகப் பேரவை தலைவர் தொண்டி அண்ணாத்துரை ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது:- தமிழகத்தில் தொடர் தேவையற்ற வீண் விவாதங்களை செய்து வரும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமலும், தேசியத் தலைவர்களை கடுமையாக வலைதளங்களிலும், ஆர்ப்பாட்டம் நடக்கும் நேரங்களில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய தமிழக அரசு, காவல்துறை வலைதளத்தில் உரிமைக்காக பேசியவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க குரல் கொடுப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது நியாயம் அல்ல.
எனவே இதுக்கு மூல காரணமாக இருந்த உசிலம்பட்டி பகுதியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று அறிவிப்பு செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேசியத் தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் ஏ எம் சௌத்ரி மீது போடப்பட்டுள்ள வழக்கை மதுரை சைபர் கிரைம் போலீசார் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியத்தலைவர் வீரமாகாளி செல்வராஜ், மாவட்ட இளைரணி வேணு,ஒன்றிய இளைஞரணி தனுஷ், மாவட்ட பொருப்பாளர் ஸ்ரீஜி , தொண்டி போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டது.