March 3, 2026
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சிறார் திரைப்படப் போட்டி.

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சிறார் திரைப்படப் போட்டி.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றிய அளவிலான சிறார் திரைப்படப் போட்டி நடைபெற்றது போட்டியினை தலைமை ஆசிரியர் அமிர்தம் மாலதி தொடங்கி வைத்தார்.

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை வட்டார வள மையம் மேற்பார்வையாளர் (பொறுப்பு) பாரதிதாசன் செய்திருந்தார். பட்டதாரி ஆசிரியர்கள் மணிகண்டன், ஜெயக்குமார், ரகமதுல்லா ஆகியோர் போட்டியினை ஒருங்கிணைத்தனர்.

சிறார் திரைப்பட போட்டியானது 202425 ஆம் ஆண்டில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களுக்கான சிறார் திரைப்படங்கள் ஆறு முதல் ஒன்பது வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திரையிடப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து சிறார் திரைப்படம் திரையிடல் சார்ந்த பள்ளி வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பொருட்டு முதலில் பள்ளியளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஒன்றிய அலுவலக போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். திரைப்பட போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடைபெறுகிறது .

கதை வசனம், ஒளிப்பதிவு, இயற்கை பாதுகாப்பு குறித்து இரண்டு நிமிடம் கதையை உருவாக்குதல் நடிப்பு பெனோஜிபைன் கதைக்கான பொருள் மற்றும் கதை மாந்தர்களோடு ஒன்றினைந்து நடித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் போட்டி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

போட்டியின் நடுவர்களாக அன்னலெட்சுமி, நாராயணசாமி, ராமலிங்கம், ராஜேந்திரன், மாரிஅய்யா, பிரதீபா நர்மதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *