
அரசுக்கு கோரிக்கை வைத்த தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர்திருமாறன் ஜி.
உசிலம்பட்டியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டுமென வி.சி. கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்வதாக ஒட்டிய போஸ்டரால் தவறு என சுட்டிக்காட்டிய தேசியத் தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் செவுத்ரி தேவர் மீது வழக்கை திரும்ப பெற அரசுக்கு கோரிக்கை வைத்த தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர்
திருமாறன் ஜி
தமிழகத்தில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனர் திருமாறன் ஜி ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் எப்போதும் எந்த வகையிலும் ஒருமித்த கருத்தோடு வாழும் மக்களோடு சில தினகளுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி சார்பாக மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியினர் உசிலம்பட்டி சில இடங்களில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டது.
இதனைக் கண்டித்து மதுரையைச் சேர்ந்த தேசியத் தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் சௌத்ரி தேவர் வலைதளங்களில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து புகார் கொடுத்தனர்.
இந்தப் புகார் குறித்து மதுரை மாவட்ட போலீசார் தேசியத் தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் செளத்ரி தேவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்த தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன் ஜி ஒரு வீடியோவை வலைதளங்களில் பதிவு செய்தார்.
அதில் பிப்ரவரி 1ஆம் தேதி உசிலம்பட்டி பகுதியில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. அந்த சுவரொட்டியில் உசிலம்பட்டி பகுதியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தவறு என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தமிழ்நாட்டின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் என்ற முறையில் நான், மற்றும் பல்வேறு முக்குலத்தோர் அமைப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அதன் பின்னர் உசிலம்பட்டி பகுதியில் பட்டியல் இனத்தவரும், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
ஏற்கனவே உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுவை கொலை செய்கிறார்கள் என்ற ஒரு அசிங்கமான உலகம் முழுக்க தகவலை பரப்பி வருவதை எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த நேரத்தில் அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது போன்று ஒரு தவறான காரணத்தைக் காட்டி ஆர்ப்பாட்டம் செய்வது அரசு அனுமதிக்க கூடாது என கோரிக்கை வைத்தோம். அதன்படி அங்கு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அனுமதிக்கவில்லை என்று கேள்விப்பட்டோம்.
இந்நிலையில் தேசியத் தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் தம்பி செளத்ரி தேவர் முகநூலில் ஒரு கண்டனமும்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக உசிலம்பட்டியில் வன்கொடுமை பகுதியாக அறிவிப்பதற்கு ஆர்ப்பாட்டம் செய்ய திருமாவளவன் வந்தால் இப்பகுதியில் ஒரு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எங்கள் பகுதி அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய பகுதி நீங்கள் வந்தால் கலவரம் வெடித்து விடும் என்றும் ஆகையால் வரக்கூடாது என்று ஒரு முகநூலில் ஒரு பதிவு செய்திருந்தார்.
இதுகுறித்து தேசிய தலைவர் திரைப்படத் தயாரிப்பாளர் சவுத்ரி தேவர் மீது ஒரு எஃப் ஐ ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபோன்று ஆளுகின்ற அரசு மீதும், கூட்டணி கட்சிகள் மீதும் பல்வேறு அமைப்பினர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தால் அதை வழக்கு போட்டு முடக்க நினைப்பது நியாயமல்ல.
அது மட்டுமல்ல இங்கே தவறுதலாக முகநூலில் தேசிய தலைவர்களை கூட இழிவாகவும், கடுமையாகவும் விமர்சித்தவர்கள் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் உசிலம்பட்டி பகுதி மிகவும் அனைத்து சமுதாயமும் சகோதரத்துவத்தோடு பழகுகின்ற பூமியில் இப்படி ஒரு தவறான போராட்டத்தை நடத்துவதை கண்டித்து பதிவு செய்ததை வழக்கு போட்டது நியாயம் இல்லை.
அவர் பதிவு செய்தது தவறாக இருந்தால் நாங்களே கண்டிப்போம். ஒரு போராட்டம் நடத்தினால் கலவரம் வந்து விடும் என்று ஒரு சமூக நோக்கத்தோடு பேசிய தேசியத் தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் சௌத்திரி தேவர் மீது வழக்கு போடப்பட்ட வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கிறோம் என்று கூறினார்.






