
மதுரை கோயில்களில் சோமவார பிரதோஷம் நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இம்மையில் நன்மை தருவார், பழைய சொக்கநாதர் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர், மதுரை அண்ணாநகர், வரசித்தி விநாயகர், மதுரை யாணைக்குழாய் முத்துமாரியம்மன், ஜெ. ஜெ. நகர் வர சக்தி விநாயகர், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், மதுரை அண்ணாநகர் வைகை காலனி, வைகை விநாயகர், மதுரை ஆவின் பால விநாயகர், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூல நாதர் கோயில்களில் பிரதோஷ பூஜைகள் நடைபெற்றது.
மதுரை விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும், பிரளயநாதர் சிவன் ஆலயத்தில், நரசிம்மர், சனீஸ்வர லிங்கம், நந்திகேஷ்வரர், சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக, செய்யப்பட்டது.
இதில், தொழிலதிபர் எம். வி. எம். மணி, கவுன்சிலர் எம். மருது பாண்டியன், கோயில் செயல் அலுவலர் ச. இளமதி, கணக்கர் சி. பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோயில் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.