
சிறந்த ஓவிய படைப்புக்கான சான்றிதழ் பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்
நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வந்த 8 வது பொருநை புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற கலை விழாவில் சிற்ப ஓவிய கண்காட்சி நடைபெற்றது.
இதில் ஐந்து மாவட்டத்தைச் சார்ந்த ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்கள் 230 பேர் 600க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
அதில் சிறந்த கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது .சிறந்த ஓவிய படைப்பிற்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூபாய் 2000 காசோலை ஆகியவற்றை திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் திரு மாரியப்பன் அவர்கள் நெல்லை மாவட்ட புதிய ஆட்சியர் சுகுமார் அவர்களிடமிருந்து பெற்றார்.
வெற்றி பெற்ற ஓவிய ஆசிரியர் மாரியப்பன் அவர்களை அப்பள்ளியினுடைய தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போது பயிலும் மாணவர்கள் பொதுமக்கள் வாழ்த்தினர்.