March 3, 2026
பழனி கோவிலில் தைப்பூசத் திருவிழாவிற்கான தேர் புதிதாக செய்யப்பட்டு வெள்ளோட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

பழனி கோவிலில் தைப்பூசத் திருவிழாவிற்கான தேர் புதிதாக செய்யப்பட்டு வெள்ளோட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்பட்ட புதிய தேருக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, அறங்காவலர் குழு தலைவர் கே எம் சுப்பிரமணியன், மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *