March 3, 2026
76- வது குடியரசு தினத்தை முன்னிட்டு பழனியில் நடைபெற்ற தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி!

76- வது குடியரசு தினத்தை முன்னிட்டு பழனியில் நடைபெற்ற தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி!

இன்று (26-01-2025) காலை – 9.00மணியளவில் பழனியில் #SDPI மாவட்ட அலுவலகம் முன்பு தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு SDPI திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் பாட்ஷா அவர்கள் தலைமை தாங்கினார்..

#SDPI மாவட்ட தலைவர் சி.கைசர் அலி அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்..

அதனைத் தொடர்ந்து அனைவரும் குடியரசு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் காஜாமைதீன், மாவட்ட செயலாளர் உமர் பாரூக், மற்றும் தொகுதி,நகரம் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள், செயல் வீரர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இறுதியாக மாவட்ட பொருளாளர் A.M.பாசித் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *