March 4, 2026
மாசடைந்த நீர்த்தேக்கத்தை தூர்வாரி புதுப்பிக்கும் நபர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு

மாசடைந்த நீர்த்தேக்கத்தை தூர்வாரி புதுப்பிக்கும் நபர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி ஊராட்சி பகுதியில் கருப்பசாமி கோவில் எதிர்புறம் நீர்த்தேக்கம் உள்ளது .இந்த நீர்த்தேக்கம் ஆனது பல ஆண்டுகளாக தூர்வாராமல் கழிவுநீர் மற்றும் ஆகாய தாமரைகள் ,பல்வேறு செடி கொடிகள் சூழ்ந்து பல்வேறு நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும் விதத்தில் இருந்து வந்தது.

கருப்புசாமி திருக்கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில தினங்களில் அதற்கான திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி எடுத்து அதனை இந்த நீர்த்தேக்கத்தில் கரைத்து செல்வர் .இத்தகைய சூழலை கருத்தில் கொண்டு சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இளைஞர்கள் ,அரசுத்துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடு உதயசூரியன் திமுக கிளைச் செயலாளர்,காளிதாஸ் மாவட்ட அமைப்பாளர் தொழிலாளர் விடுதலை முன்னணி விசிக ,செல்வம் சருத்துப்பட்டி ஊராட்சி மோட்டார் இயக்குனர் ஆகியோரது முயற்சியில் நீர்த்தேக்கத்தில் சூழ்ந்துள்ள கழிவு நீர் மற்றும் செடி கொடிகளை அப்புறப்படுத்தி நீர்த்தேக்கத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பணியினை மேற்கொண்டு வருகின்றனர் .

இவர்களின் இத்தகைய செயலை பாராட்டி சருத்துப்பட்டி ஊராட்சி பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் என பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *