August 8, 2025
தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகின்ற நவீன நெற்றிக்கண் வார இதழ் நிருபர் மாணிக்கவாசகம் கைது..!

தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகின்ற நவீன நெற்றிக்கண் வார இதழ் நிருபர் மாணிக்கவாசகம் கைது..!

தென்காசி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது. #நவீனநெற்றிக்கண்

மாணிக்கவாசகம் (எ) மாணிக்கம்.
இவர் நவீன நெற்றிக்கண் வார இதழில் தேனி மாவட்ட நிருபராக பணியாற்றி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், மணல் குவாரி உரிமையாளர்கள், தொழிலதிபர்கள் மாவட்ட அதிகாரிகள் உட்பட பலரையும் மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். செய்தி வெளியிடாமல் இருக்க இவரது ஆபிஸ்க்கு குறைந்த பட்சம் 20000/- இருபதாயிரம், அதிகபட்சம் ஐந்து லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்ற தகவலும் உள்ளது. இவை தவிர இவருக்கு தனிப்பட்ட முறையில் சில பல லகரங்கள் கொடுக்க வேண்டுமாம்.. இல்லை என்றால் துளியும் உண்மைத் தன்மை இல்லாத செய்திகளுக்கு அவதூறு செய்தி வெளியிட்டு பல்வேறு மிரட்டல்களுக்கு ஆளாக்கி பலரிடம் ஆதாயம் பார்த்து வந்துள்ளார். பல ஆண்டு காலமாக இதே வேலைகளில் ஈடுபட்டுள்ளார்…

மாணிக்கவாசகம், ஸ்டீபன்ராஜ், நக்கீரன், செல்வி ஆகியோருடன் சேர்ந்து கூட்டு சதி செய்து அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பல லட்சங்களை தமது இந்தியன் வங்கி கணக்கு எண் : 31190061098 மூலமாகவும், நேரடியாகவும் பெற்றுக் கொண்டு இன்று வரை அரசு வேலை பெற்று தராமல் பணத்தையும் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்ததன் அடிப்படையில் சுரேஷ்குமார் கொடுத்த புகார் மனுவின் காரணமாக தென்காசி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு குற்ற எண் 13/2024ன் கீழ் 406,420 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மாணிக்கவாசகத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவாகியுள்ள மற்ற மூவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மாணிக்கவாசகம் மீது மேஜர் பதவி வகித்தவரும் பாப்பு சாமி என்பவரது பேத்தியுமான,மரிய செல்வி என்பவர் கொடுத்த புகார் மனுவின் அடிப்படையில் கடந்த 24.4.2024 ஆம் தேதி கொடைக்கானல் காவல் நிலையத்தில் நெற்றிக்கண் இதழின் ஆசிரியர் A.S.மணி மற்றும் நெற்றிக்கண் நிருபர் மாணிக்கம் இருவர் மீதும் குற்ற எண்: 157/2024 ன் கீழ் 294(b), 295 (A),298, 502, 503, 504 IPC பிரிவுகளின் கீழ் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மத நல்லிணக்கத்தை கெடுத்தல், மத கலவரத்தை தூண்டுதல், பத்திரிகை சட்டத்தை மீறுதல், பணம் பறிக்கும் நோக்கோடு செயல்படுதல் போன்ற பிரிவுகளின் கீழ் கொடைக்கானல் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல், உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் விஏஓ உட்பட ஐந்து நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் உடந்தையாக செயல்பட்டதும், இவர்கள் மீது தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னால் அதிகாரிகள் துணையுடன் வழக்கை நீர்த்துப் போகச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *