
பழநியில் முன்னாள் அமைச்சர்கள் கூட்டாகப் பேட்டி: புதிய பொறுப்புகளை ஏற்க மறுப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த புதிய பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் மற்றும் அன்பழகன் ஆகியோர் பழநியில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து அறிவித்துள்ளனர்.
எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அண்மையில் நடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை ஆராயாமல் நிர்வாகிகளை இபிஎஸ் தொடர்ந்து நீக்கி வருவதாக அவர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர்.
மேலும், கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், கட்சித் தலைமைக்கு எதிராகத் தக்க காலத்தில் தகுந்த முடிவு எடுக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.






