July 29, 2026
பழனி முருகனுக்கு செய்த துரோகம் _தேர்தலில் திமுக தோல்வி . பெரும் திட்டவரைவில் 3500 கோடி என்ன ஆனது, தமிழக முதல்வர் பழனியில் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் சிவசேனா மாநில தலைவர் மணிபாரதி பரபரப்பு பேட்டி...

பழனி முருகனுக்கு செய்த துரோகம் _தேர்தலில் திமுக தோல்வி . பெரும் திட்டவரைவில் 3500 கோடி என்ன ஆனது, தமிழக முதல்வர் பழனியில் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் சிவசேனா மாநில தலைவர் மணிபாரதி பரபரப்பு பேட்டி...

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிவசேனா கட்சியின் தமிழ்நாட்டின் மாநில தலைவர் பழனி மலைக்கு சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு பெருந்திட்ட வரைவு என 3500 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் பழனியில் இன்று வரை சுமார் 400 கோடி அளவிற்கே பணிகள் நடந்துள்ளது. இதன் காரணமாக மலையைச் சுற்றி ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற பெயரில் சுமார் நேரடியாக 300 குடும்பங்களும், மறைமுகமாக 2000 குடும்பங்களும் தங்கள் தொழில்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்தது மட்டுமே இந்த திட்டத்தின் சாதனையாக உள்ளது.

அதுமட்டுமின்றி சமீபமாக பழனி முருகனுக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள இடம் பட்டா பதிவு செய்தது அனைவரும் அறிந்ததே .ஆனால் இதுபோன்று பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது, அவற்றையும் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு செய்து மீட்க வேண்டும்.

பழனி முருகனுக்கு துரோகம் செய்த திமுக தேர்தலில் தோல்வி அடைந்தது. அதேபோல் தமிழக வெற்றி கழகம் செயல்படாமல் கோயிலுக்கு சொந்தமான இடங்களையும் சொத்துக்களையும் மீட்க வேண்டும் என தெரிவித்தார்.

வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு பழனியில் நடைபெறும் சிவசேனா திருவிழாவிற்கு தேசிய தலைவர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் கனி வளவன் ,மாநில இளைஞரணி தலைவர் கார்த்திகேயன், மாவட்ட தலைவர் கார்த்தி ,மாவட்டச் செயலாளர் அருள் செல்வன், நகர தலைவர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர் மருதுபாண்டி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *