July 29, 2026
பழனி அருகே தவெக சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!"

பழனி அருகே தவெக சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!"

பழனி : ஜூலை, 21

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கணக்கம்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாபெரும் சிறப்பு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜா தலைமையிலும். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலன் முன்னிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள். மற்றும் பள்ளி மாணவ-மாணவியரின் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் பாடநூல்கள், பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

விழாவின் ஒரு பகுதியாக கழகக் கொடியேற்றப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு மாபெரும் அன்னதானமும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பழனி நகரச் செயலாளர் மிதுன் மனோகரன். ஒட்டன்சத்திரம் நகரச் செயலாளர் அருண், இணைச் செயலாளர்கள் விஜய் சிவா, விஜய் நாகராஜ், ஒன்றியச் செயலாளர்கள் கண்ணாயிரம், மத்திய ஒன்றிய செயலாளர் ஜின்னா, கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்ட பிரபு. நகரம் மாவட்டம் ஒன்றிய உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *