
பழனி 5-வது வார்டு பகுதியில் ஊர் கோவிலான ஸ்ரீ செல்ல காளியம்மன் கோவில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி : ஜூன். 26 :
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 5 வது வார்டு பகுதியில் உள்ள ஸ்ரீசெல்லகாளியம்மன் கோவில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நாட்டாமை சிவா, துணை நாட்டாமை சந்திரன், தலைவர் திருமலை, துணை தலைவர் சந்திரன், செயலாளர் சரவணன், துணைச் செயலாளர் செந்தில், பொருளாளர் சண்முகம், துணை பொருளாளர் ஐயப்பன், மற்றும் ,உதயகுமார், என புதிய நிர்வாகிகள் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இவ்விழாவில் ஆயக்குடியை சேர்ந்த சமூக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.






