July 23, 2026
பழனி முருகன் கோயிலுக்கு பழனி அக்க்ஷயா பள்ளி சார்பில் பேட்டரி வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இது கிரிவலப் பாதையில் பக்தர் வசதிக்காக இலவசமாக இயக்கப்படுகிறது.

பழனி முருகன் கோயிலுக்கு பழனி அக்க்ஷயா பள்ளி சார்பில் பேட்டரி வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இது கிரிவலப் பாதையில் பக்தர் வசதிக்காக இலவசமாக இயக்கப்படுகிறது.

பழனி முருகன் கோயிலில் கிரிவலப் பாதையில் பக்தர்களின் கார்கள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

கிரிவலப் பாதையில் உள்ள ரோப் கார் நிலையம், வின்ச் நிலையம் , பாத விநாயகர் கோவில் மற்றும் பிற கோயில்களுக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக கோயில் நிர்வாகம் பேட்டரி கார்களை கட்டணமில்லாமல் இயக்கி வருகிறது. மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் பேட்டரி வாகனத்தில் ஏறி கிரிவலப் பாதையில் எளிதாக சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் பழனி அக்க்ஷயா பள்ளி நிறுவனம் சார்பில் 23 பேர் அமர்ந்து செல்லும் வகையில் பேட்டரி வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, பள்ளி தாளாளர் புருஷோத்தமன், மங்கள் ராம் உள்ளிட்டா பலர் கலந்து கொண்டனர். பாத விநாயகர் கோயில் முன்பு பேட்டரி வாகனம் பூஜை செய்யப்பட்டு பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட்டது.

இதன் மூலம் மலையடிவாரத்தில் 38 பேட்டரி வாகனங்கள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *