July 23, 2026
பழனியில் விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பாதை அமைத்த தேவஸ்தான நிர்வாகம்.

பழனியில் விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பாதை அமைத்த தேவஸ்தான நிர்வாகம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள ஆயக்குடியைச் சேர்ந்தவர்கள் முத்துசாமி மற்றும் இவரின் மகன் சசிகுமார். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு இடும்பன் மலை அருகே, பழனி முருகன் கோயிலுக்கு பின்னால் 2 1/2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவர்கள் பல வருடங்களாக இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

முன்னதாக பழனி தேவஸ்தானம் சில நாட்களுக்கு முன்னால் இவர்கள் விவசாயம் செய்து வந்த இடத்தில் , தேவஸ்தான பேருந்து நிலையத்திற்கு செல்ல பாதை அமைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இவர்களுடைய இரண்டு அரை ஏக்கரையும் எடுத்துக்கொண்டு அதில் கட்டிடங்கள் கட்டப் போவதாகவும்‌ தேவஸ்தான தரப்பில் கூருவதாக ,சசிகுமார் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அந்த இடத்திற்கு இவர்கள் பட்டா வைத்துள்ள நிலையிலும் தேவஸ்தானம் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக சசிகுமார் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த இடத்தை எங்களுக்கு மீட்டு, மீண்டும் விவசாயம் செய்ய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *