July 28, 2026
பழனி இடும்பன் திருக்கோயில் நகை திருட்டு சம்பவத்தில் அலட்சியத்துடன் நடந்து வரும் காவல்துறை... திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராஜா ஆவேச பேட்டி...

பழனி இடும்பன் திருக்கோயில் நகை திருட்டு சம்பவத்தில் அலட்சியத்துடன் நடந்து வரும் காவல்துறை... திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராஜா ஆவேச பேட்டி...

திண்டுக்கல் மாவட்டம் பழனி இடும்பன் திருக்கோயில் நிர்வாகம் அறநிலைத்துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

இடும்பன் திருக்கோயில் நிர்வாகத்தை பழனி மலைக்கோயில் நிர்வாகத்துடன் இணைப்பதற்கான பல்வேறு முயற்சிகளை முருகன் திருக்கோயில் அதிகாரிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக இந்த கோயிலில் நகைகள் திருடப்பட்ட நிலையில் பழனி காவல் துறையில் புகார் தெரிவித்தனர்.

ஆனால் காவல் துறையினர் முறையாக விசாரணை செய்யாமல், குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் முருகன் திருக்கோயில் உடன் இடும்பன் திருக்கோவில் நிர்வாகத்தை இணைப்பதற்காக நகை திருட்டு சம்பவத்தை பூதாகரமாக செய்து வருவதாகவும் இடும்பன் திருக்கோயில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் வழக்கறிஞர் ராஜாவை பழிவாங்கும் நோக்கில் பல்வேறு அவதூறு நடவடிக்கைகளை செய்து வருவதாகவும்

தொடர்ந்து திருக்கோயிலில் திருடப்பட்ட நகைகள் அனைத்தும் செயல் அலுவலர் கண்காணிப்பில் உள்ள நிலையில் அறங்காவலர் மீது எப்படி பழி போட முடியும் திட்டமிட்டே பழனி முருகன் திருக்கோயில் நிர்வாகம் திருடு போன நகைகள் பற்றி முறையான விசாரணை செய்யாமல் திருடப்பட்டவர்களுக்கு பழனி முருகன் திருக்கோயில் நிர்வாகம் உறுதுணையாக செயல்பட்டு வருவதாகவும் இதை எதிர்த்து வழக்குப்பதிவு செய்து முறையான விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்த அறங்காவலர் குழு தலைவர் ராஜா மீது பழி போடுவது திட்டமிட்ட செயலாகும்.

மேலும் இத்திருக்கோயிலில் உள்ள நகைகள் அனைத்தும் செயல் அலுவலர் விமலாவின் கண்காணிப்பில் உள்ள நிலையில் எப்படி திருடு போயிருக்கும் தொடர்ந்து செயல் அலுவலர் விமலா மருத்துவ விடுமுறையில் சென்ற நாட்களிலும் கூட நாள்தோறும் அலுவலகத்திற்கு வந்து நகைப் பெட்டகத்தை திறந்து பல்வேறு செயல்பாடுகளை செய்துள்ளார்.

மேலும் ஆவணங்கள் எழுதுவதற்கும் சரி பார்ப்பதற்கும் தன்னுடைய சொந்த ஊரான போடிநாயக்கனூர் பகுதியில் இருந்து ஏழு நபர்களை அழைத்து வந்து அலுவலகத்திற்குள் வேலை செய்ய தங்க வைத்துள்ளார்.

எனவே செயல் அலுவலர் விமலாவை முறையாக விசாரணை செய்ய வேண்டும். தொடர்ந்து காவல்துறை அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாகவும் பல்வேறு கொலை கொள்ளை கஞ்சா உள்ளிட்ட வழக்குகளை உடனுக்குடன் கண்டுபிடிக்கும் காவல்துறை திருக்கோயிலில் நகைகள் திருடப்பட்ட நிலையில் ஏன் இதுவரை முறையான விசாரணை செய்யவில்லை என்று பரம்பரை அறங்காவல குழு தலைவர் ராஜா குற்றம் சாட்சி வருகிறார்..

மேலும் அறங்காவலர் குழு தலைவரால் நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக உறுப்பினர்களுக்கும் ஆறு மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை.

தொடர்ந்து திருக்கோயிலை விட்டு வெளியே செல்வதற்கு உத்தரவிட்டனர். இதனால் அதிகார துஷ்பிரயோகம் செய்த விமலாவை முறையான விசாரணை செய்ய வேண்டும் தொடர்ந்து பழனி முருகன் திருக்கோயில் நிர்வாகம் இடும்பண் திருக்கோவில் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது இதுபோல் இனி தொடர்ந்தால் நீதிமன்றத்தின் மூலம் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இடும்பன் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *