
பழனி வட்டம், புஷ்பத்தூர் ஊராட்சி, சாமிநாதபுரம் கிராமத்தை சேர்ந்த திரு.ஜெகன் (வயது 21) என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பழனி : ஜூன் : 06
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், புஷ்பத்தூர் ஊராட்சி, சாமிநாதபுரம் கிராமத்தை சேர்ந்த திரு.சிவசுப்பிரமணியன், திருமதி.செல்வி தம்பதியரின் மகனாகிய திரு.ஜெகன் (வயது 21) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பழனி புதுபைபாஸ் அருகில் (ஒட்டன்சத்திரம் – கோயம்புத்தூர் சாலை) விபத்துக்குள்ளாகி சிகிச்சைக்காக கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு ஏற்பட்டு நேற்று மதியம் 3.00 மணியளவில் இறந்துவிட்டார். அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக இன்று(06.06.2026) பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. மரணம் அடைந்த துயரச் சூழலில் அவரது உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் அவருடைய குடும்பத்தினரின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தன் உறுப்புகளை ஈந்து பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தை போற்றிடும் வகையில், தமிழகத்தில் இறந்த பின்னர் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அவர்களின் இறுதிச்சடங்கில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், புஷ்பத்தூர் ஊராட்சி, சாமிநாதபுரம் கிராமத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் திரு.ஜெகன் என்பவரின் உடலுக்கு பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் அவர்கள் அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மதியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், பழனி வட்டாட்சியர் திரு.மங்கலபாண்டியன் அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பழனி செய்தியாளர் : நா.ராஜாமணி – 8973350663






