February 24, 2026
அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர் சேரியில் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர் சேரியில் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

அலங்காநல்லூர், டிச:7.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர் சேரி கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு அவரது நினைவு தினத்தை ஒட்டி தி.மு.க .சார்பாக சோழவந்தான் சட்டமன்ற தொகுதி.வெங்கடேசன் .எம் .எல் .ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதில், ஒன்றியச் செயலாளர்கள் தனராஜ், முத்தையன் ,பரந்தாமன், அருண்குமார்,
நகரச் செயலாளர்கள் ரகுபதி, மனோரவேல் பாண்டியன் , அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் , துணை சேர்மன் சாமிநாதன், பாலமேடு பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன், அதிமுக சார்பாக முன்னாள் கூட்டுறவு தலைவர் செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரேவதி பாலமுருகன், ஆறுமுகம், மனோகரன், மணி,
நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் சக்கரபாணி 2026 இல் நடைபெற உள்ள சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் . வாடிப்பட்டி நாகலட்சுமி, மண்டலச் செயலாளர் சங்கிலி முருகன் , ஒன்றியச் செயலாளர் திருப்பதி, கார்த்திக், மதன், கல்லணை, மூக்குச்சாமி, காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னால் காஞ்சிபுரம் எம்.பி. விஸ்வநாதன், மாவட்டத்
தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன், வட்டாரத் தலைவர்கள் சுப்புராயலு , காந்தி, பாலமேடு நகர த் தலைவர் வைரமணி, சந்திரசேகர் , மற்றும் மலைக்கேணி, சரந்தாங்கி பாலு, முத்து, திரவியம், வி.சி.க. சார்பாக சிந்தனை வளவன், அதிவீரபாண்டியன், வக்கீல் கடல், பதினெட்டாம் படி, சின்ன இலந்தக் குளம் ராசாங்கம், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஒன்றிய தலைவர் குமரேசன், உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *