
பழனியில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அறிஞர் அம்பேத்கரின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
டிசம்பர் 7
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் , அறிஞர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி ,மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அம்பேத்கரின் புகழ் பாடும் விதமாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பன்னீர்செல்வம் நகரத் துணைச் செயலாளர் தலைமையில்.மாநில இளம்புயல் அணி துணை செயலாளர் திருவளவன். மாவட்ட செயலாளர் இரணியன். மாவட்ட அமைப்பு செயலாளர் அருந்தமிழன். மாவட்ட துணை செயலாளர் விஜய பெருமாள்.மாவட்ட துணை செயலாளர் சிவமணி. மற்றும் பல கட்சியினர். மற்றும் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள். மற்றும் தமிழ் புலிகளின் கட்சியின் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டு அம்பேத்கரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பழனி நிருபர் : நா.ராஜாமணி.






