
எஸ்.ஐ. ஆர்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு:
மதுரை:
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், மதுரை மாவட்டம்,195-திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல அனுப்பானடி துரைராஜ் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்.ஐ. ஆர். தொடர்பாக நடைபெறும் உதவி மையத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை தொலைபேசி செயலி மூலம் பதிவேற்றும் செய்யும் பணியினை ஆய்வு செய்து பார்வையிட்டார்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில் (1.12.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து, ஏச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த ஒட்டுவில்லையினை வாகனங்களில் ஒட்டி, மாணவ மாணவியர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.

பூமி பூஜை: அமைச்சர்:
தமிழ வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அ இன்று(1.12.2025)
நீர்வளத்துறையின் மூலமாக மதுரை மாவட்டம், வடக்கு வட்டம், செல்லூர் கண்மாயின் பந்தல்குடி கால்வாயில் பக்கவாட்டு வெள்ள தடுப்புச் சுவர் (இடது இடதுபுறம் கழுங்குலிருந்து இருந்து வைகை ஆறு வரை) மற்றும் சிறு பாலங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஜே சாம் இரவின் , நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் ஆகியோர் உடன் உள்ளனர்.






