
ஸ்ரீபெரும்புதூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப் பெருந்தகை பங்கேற்பு
ஸ்ரீபெரும்புதூர், நவம்பர் : 28.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் இந்திரா தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆன கு.செல்வப் பெருந்தகை அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கினார் பின்னர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து படப்பை, மாத்தூர், தெரேசாபுரம் ,மதுரமங்கலம், மொளச்சூர் உள்ளிட்ட பள்ளிகளுக்கு மூன்று கோடி மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்பட்டது,
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் நளினி, காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில தலைவர் ஐயப்பன்,ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ்,உள்ளிட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை அவர்கள் கேள்வி :இந்தியா முழுவதும் சுமார் இரண்டு கோடி ஆதார் இறந்தவர்கள் பட்டியல் என நீக்கப்பட்டுள்ளது. ?
பதில் :இவை அனைத்தும் பாஜகவின் சூழ்ச்சி, இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது குறுக்கு வழியில் செயல்படும் இந்த பாஜக அரசின் இந்த செயலுக்கு நீதிமன்றத்தை நாடுவோம் எனக் கூறினார் .
கேள்வி :செங்கோட்டையன் அவர்கள் தா.வெ.கா.வில் இணைந்தது குறித்து உங்கள் கருத்து ..?
பதில் : செங்கோட்டையின் இணைந்தது பாஜகவின் திட்டம் இன்னும் எத்தனை பேர் வந்தாலும் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் 2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மு க ஸ்டாலின் முதலமைச்சராக அமருவது உறுதி எனக்கு கூறினார்.






