March 2, 2026
மாநில அளவிலான கபாடி போட்டி..!

மாநில அளவிலான கபாடி போட்டி..!

மதுரை:

மதுரை அவனியாபுரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

35 அணிகள் கலந்து கொண்ட கபாடி போட்டிகள் 2 நாள் பகலிரவு தொடர் போட்டிகள் நடைபெற்றது.

தமிழக துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஸ்டாலின் 48 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவனியாபுரம் இளைஞரணி சார்பில் நூறாவது வார்டில் மாநில அளவிலான கபடி போட்டியில் நடைபெற்றது.

கபடி போட்டிக்கு, நூறாவது வார்டு செயலாளர் நேதாஜி ஆறுமுகம் இளைஞரணி செயலாளர் வில்வமணி மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.

சிறப்பு விருந்தினராக பொதுக்குழு உறுப்பினர் எஸ் ஆர் கோபி, பகுதி செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில், முதல் பரிசாக 45 ஆயிரம் பணம், கோப்பையும், 2வது பரிசாக 35 ஆயிரம் பணம் மற்றும் கோப்பையும், 3வது பரிசாக 25 ஆயிரம் பணம் ,கோப்பை, 4வது பரிசாக ரூபாய் 15 ஆயிரம் பணம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.

மேலும் ,ஆறுதல் பரிசாக நான்கு அணிக்கும் வழங்கப்பட்டது., முதல் பரிசை அவனியாபுரம் தனஞ்செயம் அணியினர் வெற்றி பெற்று 45 ஆயிரம் பணம் மற்றும் கோப்பையை கைப்பற்றினர்.

இரண்டாவது பரிசாக போஸ் நினைவு கபடி குழுவினர்35 ஆயிரம் பணம் மற்றும் கோப்பைகளையும் மூன்றாவது பரிசாக எச்.பி. காலனி அணி 25 ஆயிரம் பணம் மற்றும் கோப்பையை கைப்பற்றியது., 4வது பரிசாக நேதாஜி கபாடி குழு ரூபாய்15 ஆயிரம் மற்றும் கோப்பை வென்றது.

மேலும், ஆறுதல் பரிசாக நான்கு கபடி குழுவினருக்கு தல 8,000 ரூபாய் கோப்பை வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *