March 3, 2026
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் பல வருடங்களாக சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் கிராம பொதுமக்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் பல வருடங்களாக சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் கிராம பொதுமக்கள்

நான்கு கிராமங்களை இணைக்கும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள சேரும் சகதியுமான சாலையால் கடும் அவதி:

சோழவந்தான்: நவம்பர்,24

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி மற்றும் கரட்டுப்பட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட மேல் நாச்சிகுளம் பொம்மன் பட்டி கணேசபுரம் ஆகிய நான்கு கிராமங்களை இனைக்கக்கூடிய கிராம சாலை பல வருடங்களாக அமைக்காததால், மழைக்காலங்களில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேரும் சகதியுமாக காணப்படுகிறது .
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி செய்யக்கூடிய சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கக்கூடிய இந்த கிராமங்களில் ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையானது மிக மோசமான நிலையில் உள்ளதாக இந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பல வருடங்களாக அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், இன்று மாலை பெய்த கன மழை காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்படுகிறது.

ஏற்கனவே இந்த பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக செயல்படுவதில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது கொள்முதல் நிலையங்களுக்கு அறுவடை செய்த நெல்களை கொண்டு வருவதில்
இந்த சாலைகளால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட கருப்பட்டி கரட்டுப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட மேல் நாச்சிகுளம் பொம்மன் பட்டி கணேசபுரம் அம்மச்சியாபுரம் ஆகிய நான்கு கிராமங்களை இணைக்க கூடிய சாலையை மேம்படுத்தி போக்குவரத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சாலை அமைத்தால் தான் பேருந்துகள் இந்த கிராமத்திற்கு வரும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *