
ஸ்ரீ பெரும்புதூரில் - சென்ட்ரல் பாங்க் ஆப் விவசாய கடன் சேவை வழங்குதல் திட்ட முகாம்...
ஸ்ரீ பெரும்புதூர் நவம்பர் 14
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் விவசாய கடன் சேவை வழங்குதல் திட்ட முகாம்.நடைபெற்றது.

இதில் வங்கி மேலாளர் சிவகாமி, சென்னை ரீஜனல் முதன்மை மேலாளர் திலீப் குமார், ஸ்ரீபெரும்புதூர் கிளை மேலாளர் சுஜிதா, ஸ்ரீபெரும்புதூர் கிளை துணை மேலாளர் மதுமிதா, சின்ன காஞ்சிபுரம் கிளை துணை மேலாளர் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மகளிர்க்கு வங்கி கடன்கள் குறித்து விளக்கினர்.
இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்தநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் தொடக்கமாக மூன்று மகளிர்க்கு வங்கி கடன் கொடுப்பதற்கான உறுதி அணை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கு பெற்ற மகளிர் சுய உதவிகளைச் சேர்ந்த மகளிர்க்கு மதிய உணவு வழங்கப்பட்டது.






