March 2, 2026
சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம்...

சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம்...

மதுரை:

மதுரை மாவட்டத்தில் பல கோயில்களில், சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம், விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயம், தாசில்தார் நகர் சித்தி விநாயகர், வரசித்தி விநாயகர் ஆலயம், சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றது.

இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

மதுரை அண்ணாநகர் வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்தில் கணபதி ஹோமம், அதைத் தொடர்ந்து கோயில் பட்டர் காந்தன் சிறப்பு அபிஷேகங்களை, விநாயகருக்கு செய்தார்.

வைகை காலனி மேற்கு சக்தி மாரியம்மன் ஆலயத்தில் விநாயகருக்கு, அர்ச்சகர் கோபாலகிருஷ்ணன் சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சணைகளை செய்தார்.

இதேபோல, மதுரை அருகே கருப்பாயூரணி செந்தமிழ் நகரில் உள்ள விநாயகருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *