
சமூக நீதி மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கம்..
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி எவாஞ்சலின் தலைமை தாங்கினார்.
மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திரு சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையாளர் திரு நிக்சன் காவல் ஆய்வாளர் திருமதி.சங்கரேஸ்வரி , உதவி ஆய்வாளர்கள் திரு மாதவன் திரு கணேசன், திரு இசக்கிமுத்து தாஸ் , தலைமை காவலர் சண்முக பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளியின் நூலகத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் பெருமான புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளை முதுகலை தமிழாசிரியர் அன்டோ ஆரோக்கிய ஜோதி தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னு சாமி செய்திருந்தார்.






