
குன்றத்தூரில் 84.65 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருக்கோயில் அலுவலகம மற்றும் அன்னதான கூடம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..
குன்றத்தூர்
நவம்பர் 7:
குன்றத்தூரில் திருக்கோயில் புதிய அலுவலகம்மற்றும் புதிய அன்னதான கூடம் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்தா.மோ.அன்பரசன் ,இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி கே சேகர்பாபு திறந்து வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள குன்றத்தூரில் அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு நாகேச்சர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட16.65 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயில் புதிய அலுவலகம் மற்றும்68 லட்சம் மதிப்பீட்டில் புதிய அன்னதான கூடம் குறு சிறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தெரிந்து வைத்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கு.செல்வப் பெருந்தகை, காஞ்சிமாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் உடன் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மற்றும் கோயில் நிர்வாக அலுவலர் சுதாகர், அறங்காவலர் குழு தலைவர் சிவசண்முகம், கருணாநிதி உள்ளிட்ட அறங்காவலர்கள் உடன் இருந்தனர்.






