
பழனி நகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு...
பழனி : நவம்பர்.06,
திண்டுக்கல் மாவட்டம் பழனி குப்பை கிடங்கில் இருந்து வெளிவரும் அதிகப்படியான புகையினால் பழனியில் காற்று மாசுபாடு அதிகம் ஏற்படுகிறது.

குப்பை கிடங்கு அருகில் அமைந்துள்ள ஐஸ்வர்யா நகர், காந்திநகர், சத்யா நகர், போன்ற பகுதிகளில் குடியிருக்கும் பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை குப்பை கிடங்கில் இருந்து வெளிவரும் புகையினால் பாதிக்கப்படுகின்றனர். என்று தீரும் இந்த அவல நிலை மாதத்திற்கு இரண்டு முறையாவது இதுபோன்று குப்பை கிடங்கில் இருந்து குப்பைகளை எரிப்பதனால் வெளிவரும் புகையினால் காற்று மாசுபாடு ஏற்பட்டு நச்சு கலந்த புகையினை அப்பகுதி மக்கள் சுவாசித்து வருகின்றனர்.

இதனால் மூச்சுத் திணறல், நுரையீரல் தொற்று என நோய் பரவும் அபாயங்கள் உள்ளது. இந்த நிலையை தடுக்க பழனி நகராட்சி நிர்வாக அதிகாரிகள், மற்றும் சுகாதாரத்துறை அலுவலர், பழனி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் என அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இந்த நிலையை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.
பழனி நிருபர் : நா.ராஜாமணி.






