
மதுரை அப்போலோ கேன்சர் சென்டர் 'டார்க் சாக்லேட்' மூலம் மார்பக சுயபரிசோதனை விழிப்புணர்வு.!
மதுரை அப்போலோ கேன்சர் சென்டர் செக் ஓலேட் என்ற டார்க் சாக்லேட்டை அடிப்படையாக கொண்ட ஒரு விழிப்புணர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முயற்சியானது ஒரு சாதாரண சாக்லேட் பெண்களுக்கு தங்களை பராமரிக்கும் நினைவூட்டலாக மாற்றுகிறது, அதன்படி செக்-ஓலேட் என்ற அந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சாக்லேட்டகள் வழங்கப்படும்.
அதன் உரையை ஸ்கேன் செய்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய்க்கான சுய பரிசோதனை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து புரிதல் ஏற்படுத்தப்பட உள்ளது.
மதுரை அப்போலோ கேன்சர் சென்டர் 30 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவ சிகிச்சையில் நம்பிக்கையான ஓர் இடத்தை பெற்று வருகிறது.
சிறப்பான மருத்துவ நிபுணர்களை கொண்டு கொண்டு மிக துல்லியமான உயர்தர கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் 360 டிகிரி ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சையை அளித்து வருகிறது.
அதி நவீன தொழில்நுட்ப உதவியுடன் சர்வதேச தரத்தில் மருத்துவ சிகிச்சையை வழங்குவதில் அப்போலோ தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வருகிறது.
அப்போலோ மருத்துவமனை, மதுரை மண்டலத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர். நிகில் திவாரி கூறியதாவது, இந்தியப் பெண்களிடையே புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்புக்கான முக்கியக் காரணமாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. இந்தியாவில் புதிதாக ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளில், 13.5% பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புக்களில், 10.6% மார்பக புற்றுநோய் காரணமாகிறது. தேசிய ஆய்வின்படி 30 முதல் 69 வயதுக்குட்பட்ட பெண்களில் வெறும் 1.6% பேர் மட்டுமே பரிசோதனை செய்துள்ளனர்.
அதிக விழிப்புணர்வு மற்றும் முன்கூட்டிய தடுப்பின் அவசரத் தேவையை உணர்ந்து, செக்-ஓலேட் மூலம் சுய கவனிப்பை இயல்பாக்குவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.
மேலும் பெண்கள் மார்பக சுயபரிசோதனையை மாதாந்திர செயல் முறையாக மாற்றவும், ஆரம்பத்திலேயே தாங்கள் ஆரோக்கியத்தை கவனிக்கவும் இது உதவுகிறது இது உதவுகிறது.
மருத்துவ சேவைகளின் இணை இயக்குனர் டாக்டர் பிரவீன் ராஜன் கூறியதாவது: பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால், நாடு செழிக்கும், அவர்களின் நல்வாழ்வு பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பட்சத்தில் 2040 ஆம் ஆண்டிற்குள் உலகப் பொருளாதாரத்தில் ஆண்டுக்கு சுமார் ஒரு ட்ரில்லியன் டாலர்களைச் சேர்க்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்போலோவில், பெண்களின் ஆரோக்கியத்தை தேசிய முன்னுரிமையாக கருதி, ஆரம்பக் கண்டறிதல் மேம்படுத்துகிறோம். செக் -ஓலேட் முயற்சியின் மூலம் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தேவையான சிகிச்சையை பெறலாம்.
மேலும் தென் தமிழகத்தில் முதன்முறையாக பெண்களுக்கு என விரிவான மார்பக நல சிகிச்சையை வழங்குவதற்காக பிரத்தியகமாக அப்போலோ பிரெஸ்ட் கிளினிக் உள்ளது.
இந்த கிளினிக்கின் மூலம் பெண்களின் மார்பகம் குறித்த ஆரோக்கியத்தையும் மற்றும் அதன் பிரச்சினைகளையும் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயால் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ப .கே. முத்துக்குமாரசாமி டாக்டர் ஜே தேவானந்த், டாக்டர் டி. தீனதயாளன் கூறியதாவது: செக்- ஓலேட் என்கிற சாக்லேட் பெண்களை தங்களை கவனித்துக் கொள்ளும் மென்மையான நினைவூட்டலாக மாற்றுகிறது.
அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் ஆர்டிபிசியல் இன்ட லிஜென்ஸ் துணை கொண்ட பரிசோதனை மற்றும் திறமையான மருத்துவர் நிபுணர்களை கொண்டு பெண்களின் மார்பகம் சார்ந்த மருத்துவப் பிரச்சனைகளை சரி செய்வதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது, புற்று நோயால் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் டி. கே. சர்ப்பராஜன் டாக்டர் கே பாலு மகேந்திரா கூறியதாவது: தென் தமிழகத்தின் மார்பக பிரச்சனைகளால் அவதிப்பட்டு வரும் பெண்களுக்கு நம்பிக்கையையும் மருத்துவ வசதியையும் அளிக்கக் கூடிய வகையில் ஏற்கனவே ஒரு மிக முக்கியமான முன்னெடுப்பாக அப்போல்லோ பிரஸ்ட் கிளினிக் உள்ளது.
அதன் தொடர்ச்சியாக செக்- ஓலேட் டார்க் சாக்லேட்டின் ஆரோக்கிய நன்மைகளை பயன்படுத்தி, மார்பக சுய பரிசோதனைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். கதிர்வீச்சு புற்றுநோயியால் நிபுணர்கள் டாக்டர் ஜே. ஜேபசிங், டாக்டர் ஜி, சதீஷ் குமார், டாக்டர் ஆயிஷா பாத்திமா கூறியதாவது தற்போது மிகக் குறைந்த அளவிலான பெண்களே மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்த பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டியது அவசியம்.
மார்பக புற்றுநோயைப் பொறுத்தவரை, ஆரம்பக் கண்டறிதல் உயிரைக் காக்கும் அப்போலோ கேன்சர் சென்டர் 40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணையும் வழக்கமான மார்பகப் பரிசோதனைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு, மார்பகப் புற்றுநோயின் அபாயங்களைப் புரிந்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறது.
இன்று எடுக்கப்படும் ஒரு எளிய முன்கூட்டிய நடவடிக்கை, நாளைய எண்ணற்ற உயிர்களை காப்பாற்ற கூடும்.
நிகழ்விடத்தில் அப்போலோ மருத்துவமனை, மதுரை மண்டலத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் நிகில் திவாரி, மருத்துவ சேவைகளின் இணை இயக்குனர் டாக்டர் பிரவீன் ராஜன், புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் பி.கே. முத்துகுமாரசாமி. டாக்டர் ஜே.தேவானந்த் டாக்டர் டி.தீனதயாளன், புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் டி.கே.சர்பராஜன் டாக்டர் கே.பாலு மகேந்திரா, கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்கள் டாக்டர் ஜே.ஜேபசின் டாக்டர் ஜி. சதீஷ்குமார், டாக்டர் ஆயிஷா பாத்திமா, நிர்வாக துணைபொது மேலாளர் லாவண்யா மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு மூத்த மேலாளர் பிரேம் டேனியல் ஆகியோர் கலந்து கொண்டனர்.






