
ஸ்ரீபெரும்புதூரில் அரசு பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டி -2025.செல்வப் பெருந்தகை MLA பங்கேற்பு.
ஸ்ரீபெரும்புதூர் நவம்பர் 1
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அரசு பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டி நடைபெற்றது.

இப்போட்டியினை மாவட்ட உயர் கல்வி அலுவலர் நளினி அவர்கள் துவக்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கு.செல்வப் பெருந்தகை MLA அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல், டேக்கியான் சீனியர் என்ஜினியர் ராபர்ட் மனோகரன், சந்தோஷ் காலேஜா, டேக்கியான் ப்ராஜெக்ட் கோ ஆர்டினேட்டர் எட்வின் சாலமோன் ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதில் 100 மீட்டர்முதல் 1500 மீட்டர் வரையிலான ஓட்டம், குண்டு எறிதல், வட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் சுமார் 480 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.






