
மதுரை-கோயில்களில் கந்த சஷ்டி விழா.
மதுரை.
மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில், கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது.
மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயம், சித்தி விநாயகர், வரசித்தி விநாயகர், செல்வ விநாயகர், கோமதி புரம் ஜூப்பிலி டவுன் ஞான சித்தி விநாயகர் கோயில்களில் இந்த சஷ்டி, முருகனுக்கு சிறப்பு அபிஷேக, அர்ச்சணைகள் நடைபெற்றது.
மதுரை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், கந்த சஷ்டியை முன்னிட்டு பாலமுருகனுக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேக, அர்ச்சணைகள், பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இக் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை 9.15..மணிக்கு பாலமுருகனுக்கு தயிர் அன்னப் பாவடை அபிஷேகம் நடைபெறுகிறது.
இதேபோல், மதுரை அருகே சோழவந்தான் விசாக நட்சத்திர விளங்கும் பிரளயநாத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டியை முன்னிட்டு பாலமுருகனுக்கு, தொழிலதிபர் எம்.வி.எம்.மணி, கவுன்சிலர்கள் மருதுபாண்டியன், வள்ளிமயில் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் சி. பூபதி மற்றும் ஆலயம் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
மதுரை அருகே திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், குமரன் கோயில்களில் இந்த சஷ்டி விழா நடைபெற்றது.






