March 2, 2026
வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலக கட்டுமான பணி: பேரூராட்சி இயக்குனர் ஆய்வு :

வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலக கட்டுமான பணி: பேரூராட்சி இயக்குனர் ஆய்வு :

வாடிப்பட்டி, அக்.26-

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலக கட்டிடம் புதிதாக ரூ.1 கோடி 9 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.

அதேபோல், போடிநாயக்கன்பட்டி யில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டும் கட்டுமான பணியும் நடந்து வருகிறது. இந்த இரண்டு பணிகளையும், பேரூராட்சிகளின் இயக்குனர் பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி, பேரூராட்சித்தலைவர் மு. பால்பாண்டியன் பணி பற்றி விளக்கம் அளித்தனர்.

உடன், இணை இயக்குநர் (திட்டம்) காளியப்பன், உதவி இயக்குநர் கணேசன், செயற்பொறியாளர் ராஜாராம், உதவிப்பொறியாளர் நாகராஜ், பணி ஆய்வாளர் கற்பகம், ஆகியோர் வந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *