
உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி..!
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியில் அன்பாடும் மூன்றில் சார்பாக உயர் கல்வி வழிகாட்டுதல் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியை திருமதி இவாஞ்சலின் தலைமை தாங்கினார்.
வரவேற்பு உரையினை பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி ஆற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அருள்மிகு பன்னிரு படி ஐயன் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் திரு ஆனந்த் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.
அவரோடு பேராசிரியர் திரு. தனுஷ் ராஜா அவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்பாடு ம் மூன்றில் ஒருங்கிணைப்பாளர் திரு மாரியப்பன் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு ஆசிரியர் திரு சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.






