
காராத்தே : கின்னஸ் ரெக்கார்ட் படைக்கும் சகோதரர்கள்
இராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த ராஜா ரஹ்மான் – நஜ்முல் ஹூதா தம்பதியின் மகன்களான அய்மன் உதுமான், அய்சர் உதுமான் சகோதரர்கள் கராத்தே பயின்று அது தொடர்பான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வாங்கிக் குவித்துள்ளனர்.
கமுதியில் உள்ள செயிண்ட் ஜேம்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பயின்றுவரும் இவர்கள், சென்னை தாம்பரத்தில் உலக கராத்தே மெரிட்டல் ஆர்ட்ஸ் அசோசியேஷன் அமைப்பு நடத்திய கின்னஸ் உலக சாதனை படைப்பதன் முயற்சியாக காராத்தே நிகழ்ச்சியில் பங்கேற்று பதக்கமும் சான்றிதழும் பெற்றுள்ளனர்.
அய்மன், அய்சர் இருவரும் கிஸ்வா கராத்தே மற்றும் சிலம்பு பயிற்சி பள்ளியில் பயிற்சியாளர் அகமது அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெறுகின்றனர்.
இவர்களின் இந்த வெற்றிக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது. மேலும் சகோதரர்களின் தந்தை ராஜா ரஹ்மான், தனது மகன்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித்தர வேண்டும் என்றார்.






