
வாடிப்பட்டி வார சந்தையில் தீபாவளிக்கு ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
வாடிப்பட்டி, ஆக.14-
மதுரை,
வாடிப்பட்டி வார சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ. 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை தனியார் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையில், ஆடு,மாடு,கோழி மற்றும் காய்கறிகள் விற்கப்படுகிறது.
இந்த சந்தைக்கு, மதுரை,திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும், வாடிப்பட்டி, சோழவந்தான், மண்ணாடி மங்கலம், விக்ரமங்கலம், உசிலம்பட்டி, நிலக்கோட்டை வத்தலக்குண்டு, அலங்காநல்லூர், பாலமேடு, உள்ளிட்ட கிராமங்களில் இருந்து தீபாவளிக்காக பிரத்யோகமாக வழங்கப்பட்ட ஆடுகளை எடுத்துக் கொண்டு விவசாயிகளும் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 8 மணி வரை சந்தை செயல்படும். இதில் ஆடு மாடு கோழிகள் காலை 5 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் முடிந்து விடும். அதன் பின் காய்கறி, பலசரக்கு வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரங்கள் மட்டும் தொடர்ந்து விற்பனையாகும்.
இந்நிலையில், வரும் 20ந்தேதி திங்கள்கிழமை தீபாவளிபண்டிகை வருவதை யொட்டி, கிராமப் புறங்களில் இருந்து வெள்ளாடுகள் வந்தது. அதனால் ஒரு ஆட்டின் விலை ரூ.8ஆயிரம் தொடங்கி ரூ. 15 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது.
இதனால், ரூ.50 லட்சத்திற்கு வியாபாரம் நடந்தது.






