March 2, 2026
தனியார் நிறுவனத்தின் கழிவு நீரால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்

தனியார் நிறுவனத்தின் கழிவு நீரால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்

ஸ்ரீபெரும்புதூர் அக்டோபர் 14

தனியார் நிறுவனத்தின் மூலம் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 25 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 800 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் வகுப்பறையில் கொசுக்கள் உள்ளதாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர் இதனை நேரில் சென்று பார்த்த போது வகுப்பறையின் அருகே கழிவு நீர் தேங்கி நிற்கிறது.

இக்கழிவுநீர் எங்கிருந்து வருகிறது என்று ஆய்வு செய்தபோது பள்ளிக்கு அருகே உள்ள ஜாய் ஸ்டில் ஸ்க்ரப் குடோன் செயல்பட்டு வருகிறது இந்நிறுவனம் பள்ளி காம்பௌண்ட் சுவரை உடைத்து நிறுவனத்தின் கழிவு நீர் நிறுவனத்தில் உள்ளே தேங்கி நிற்கும் மழை நீர் என அனைத்தையும் பள்ளி வகுப்பறைக்கு அருகே விடுவது தெரியவந்துள்ளது இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் ஜாய்ஸ் ஸ்டீல் மேலாளர் எனக் கூறிய சித்திக் அவர்களிடம் பலமுறை கூறியும் கண்டுகொள்ளவில்லை,

இக்கழிவு நீரால் வகுப்பறையில் துர்நாற்றம் வீசுவதும் கொசுக்கள் வருவதுமாக உள்ளது இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது,

எனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்களின் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *