
மதுரை பகுதி கோயில்களில் தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு, சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்றது.
மதுரை:
மதுரை பகுதி கோயில்களில் தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு, சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்றது. மதுரை அருகே சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சுவாமி கோயிலில், தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, கால பைரவருக்கு பக்தர்கள் பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் பக்தர்களால், கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வடைமாலை அணிவித்து, மணிகண்டன் பட்டர் அர்ச்சணைகளை செய்தார்.
இதேபோல் மதுரை தாசில்தார் நகர் வரசித்தி விநாயகர், ஞான சித்தி விநாயகர், வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம், வைகை காலனி மேற்கு பாபா கோயில், அண்ணாநகர் சர்வேஸ்வரர் ஆலயம், கோமதி புரம் செல்ல விநாயகர் ஆலயங்களில் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை , கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






