March 2, 2026
மதுரை மாவட்ட ஆட்சியர்: ஆய்வு

மதுரை மாவட்ட ஆட்சியர்: ஆய்வு

மதுரை:

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் தமிழக அரசின் பங்கனிப்போடு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை கீழ் செயல்படும் ஜோ அந்திரியா பள்ளி மற்றும் விடுதியை ஆய்வு செய்து கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், வாசித்தல்,எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவு திறன்கள் குறித்து மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

மேலும், விடுதியை ஆய்வு செய்து மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் கேட்டறிந்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் , மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்,
ஒத்தக்கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் , மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் , கொடிக்குளம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் அடிப்படை கற்றல் திறன்கள் குறித்து ஆய்வு செய்தார்.

அங்கு சிகிச்சைக்காக வந்துள்ள பொதுமக்களிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *